தந்தி மாரியம்மன் திருவிழா ஆதிசேஷ வாகனத்தில் அம்மன் உலா
ADDED :940 days ago
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவில் நேற்று மேல் கடை வீதி பொதுமக்கள் சார்பில் ஆதிசேஷ கமல வாகனத்தில் அம்மன் ஊர்வலம் நடந்தது.
விழாவில், துர்க்கை அம்மன் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் தந்தி மாரியம்மன் கோவிலை அடைந்தது அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, மேல் கடை வீதியில் அன்னதானம் நடந்தன. விழாவில் அம்மன் ஆதிசேஷ கமல வாகனத்தில் திருவீதி உலா, விளக்கு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர். மற்றும் நீலகிரியின் அரிய வகை கனிகள் உட்பட பல்வேறு பழங்களின் அலங்காரங்களுடன் அம்மனுக்கு படைத்து வழிபாடு நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை மேல் கடை வீதி பொதுமக்கள், இளைஞர், மகளிர் குழுவினர் செய்தனர்.