உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீர்காழியில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் : ஆதீனம் கட்டுப்பாட்டில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

சீர்காழியில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் : ஆதீனம் கட்டுப்பாட்டில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

மயிலாடுதுறை: சீர்காழி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் தெய்வத்திருமேனிகள், செப்பேடுகளை தருமபுரம் ஆதீனம் கட்டுப்பாட்டில் வைத்து பராமரிக்க மத்திய அரசின் நடவடிக்கை எடுக்கும் - புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம். செல்வம் தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோவிலுக்கு நேற்று புதுச்சேரி மாநில சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வந்தார் அவருக்கு கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது தொடர்ந்து அவர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் பின்னர் அவர் சீர்காழி கோவில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தெய்வத்திருமேனிகள் மற்றும் தேவார பதிகம் பதிக்கப்பட்ட செப்பேடுகள் ஆகியவற்றை பார்வையற்ற புதுச்சேரி சபாநாயகருக்கு தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பிரமாச்சாரியார் சுவாமிகள் தெய்வத்திருமேனிகள் மற்றும் செப்பேடுகள் குறித்து விளக்கம் அளித்தார். முன்னதாக புதுச்சேரி சபாநாயகர் தர்மபுரம் ஆதீன குருமகாசன்னிதானத்திடம்  அருளாசி பெற்றார். அப்போது  குரு மகா சன்னிதானம்  சீர்காழி கோவில் கும்பாபிஷேக பத்திரிகையை  சபாநாயகருக்கு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி மாநில சபாநாயகர் ஏம்பலம் செல்வம் : பழமைவாய்ந்த சட்டநாதர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட தெய்வத்திருமிகளை மற்றும் செப்பேடுகளை மத்திய அரசின் பிரதிநிதியாக பார்வையிட வந்தேன்.  பூமிக்கு அடியில் கிடைக்கும் அனைத்து  தொல்லியல் பொருட்களும் மத்திய அரசுக்கு  உட்பட்டது. சீர்காழி சட்ட நாதர் சுவாமி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன்னால் ஆனது தெய்வத்திருமேனிகள், செப்பேடுகளை தருமபுரம் ஆதீனம் கட்டுப்பாட்டில் வைத்து பராமரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !