ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கோடை வசந்த உற்ஸவம்
ADDED :938 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கோடை வசந்த உற்ஸவம் நேற்று முன்தினம் முதல் துவங்கியது. இதனை முன்னிட்டு நேற்று மாலை 6:00 மணிக்கு கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து, சந்தன காப்பு சாற்றப்பட்டு, மலர் சட்டை அணிவிக்கப்பட்டு, கோயில் யானை ஜெயமால்யதா முன் செல்ல முக்கிய வீதிகள் சுற்றி, இரவு 6: 45 மணிக்கு நீராழிகுளம் மண்டபத்திற்கு எழுந்தருளினர். அங்கு ராஜீ பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். இரண்டாம் ஆண்டாக நீராழிகுளம் மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் வேதபிரான் சுதர்சன், அரையர் முகுந்தன், ஸ்தானிகம் கிருஷ்ணன் மற்றும் கோயில் பட்டர்கள் பங்கேற்றனர். வசந்த உற்ஸவம் மே 5 சித்ரா பவுர்ணமி வரை 10 நாட்கள் நடக்கிறது.