கைலாச, புஷ்ப பல்லாக்கு வாகனத்தில் வலம் வந்த சந்திரசேகர பெருமான்
ADDED :935 days ago
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா நான்காம் நாளான நேற்று காலையில்,பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆனந்த வள்ளி சமேத சந்திரசேகர பெருமான் கமல வாகனத்தில் காலையிலும்,மாலையில் கைலாச வாகனம் மற்றும் புஷ்ப பல்லாக்கு வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.