உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமி நித்தியானந்தகிரி சுவாமிகளின் முதல் ஆராதனை விழா

சுவாமி நித்தியானந்தகிரி சுவாமிகளின் முதல் ஆராதனை விழா

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், தபோவனம், ஸ்ரீ ஞானானந்தா நிகேதனின் ஸ்தாபகர் நித்தியானந்தகிரி சுவாமிகளின் முதல் ஆராதனை விழா நடந்தது.

திருக்கோவிலூர் அடுத்த தபோவனம் ஸ்ரீ ஞானானந்தா நிகேதன் ஸ்தாபகரான, சுவாமி நித்தியானந்தகிரி சுவாமிகளின் முதலாவது ஆராதனை விழா நிகேதன் வளாகத்தில் நடந்தது. காலையில் அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம், நிகேதன் சச்சங்க மண்டபத்தில் வேத மந்திரங்கள் முழங்க தீர்த்த நாராயண பூஜை நடந்தது. இதில் ஞானானந்தா நிகேதன் அறங்காவலர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !