உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தியாகராஜபுரத்தில் குத்து விளக்கு பூஜை

தியாகராஜபுரத்தில் குத்து விளக்கு பூஜை

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரத்தில் குத்துவிளக்கு பூஜை நடந்தது.தியாகராஜபுரம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போலீஸ் நண்பர்கள் இயக்கம் சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. நேற்று முன் தினம் லஷ்மி பூஜை, குத்துவிளக்கு பூஜை நடந்தது. பெண்கள் பங்கேற்று குத்துவிளக்கேற்றி வழிபட்டனர். ஏற்பாடுகளை போலீஸ் நண்பர்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பச்சையாபிள்ளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !