உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் மரத்தேர் வீதியுலா

திருத்தணி முருகன் கோவிலில் மரத்தேர் வீதியுலா

திருத்தணி, : திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த மாதம், 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் உற்சவர் ஒவ்வொரு வாகனத்தில் தேர்வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில் நேற்று, மாலை 6:30 மணிக்கு மரத்தேர் விழா நடந்தது. உற்சவர் முருகப்பெருமான் மரத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின், கொட்டும் மழையில் பக்தர்கள் தேரின் வடம் பிடித்து தேர்வீதியில் ஒரு முறை வலம் வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !