உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி விசாலாட்சி அம்மன் தபசு திருக்கோலம்: இன்று திருக்கல்யாணம்

பரமக்குடி விசாலாட்சி அம்மன் தபசு திருக்கோலம்: இன்று திருக்கல்யாணம்

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது.

இக் கோயிலில் நேற்று காலை 10:00 மணிக்கு விசாலாட்சி அம்மன் தபசு திருக்கோலத்தில் வீதி வலம் வந்தார். பின்னர் மாலை 5:00 மணிக்கு பிரியா விடையுடன் சந்திரசேகர சுவாமி எழுந்தருளி, விசாலாட்சி அம்மன் மாலை மாற்றும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு சுவாமி அம்பாள் கோயிலை அடைந்தனர். இன்று காலை 11:00 மணிக்கு ஈஸ்வரன் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !