உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

பழநி: பழநி, மேற்கு ரத வீதியில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயில் திருவிழாவில் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.

பழநி, மலைகோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் மேற்கு ரத வீதியில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.26-ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் தினமும் சிம்ம வாகனம், சேஷ வாகனம், மரசப்பரம், அனுமார் வாகனம், தங்க குதிரை வாகனங்களில் வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. சங்கல்பம், புண்யாவாகனம், நடந்தது. சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது. இன்று (மே.,2) திருக்கல்யாண உற்சவம் இரவு 7:30 மணிக்கு நடைபெற்றது. சிறப்பு தீபாராதனை நடந்தது. அதன்பின் சேஷ வாகனத்தில் அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் சுவாமி புறப்பாடு நடந்தது. (மே.4.ல்) காலை 7:35 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெற உள்ளது. மே.,5 வரை பத்து நாட்கள் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் நடராஜன், கன்பத் கிரேண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்துஅய்யர், நெய்க்காரப்பட்டி அரிமா சங்கம் சுப்புராஜ், கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !