உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிமூர்த்தி பெருமாள் சேஷ வாகனத்தில் திருவீதி உலா

ஆதிமூர்த்தி பெருமாள் சேஷ வாகனத்தில் திருவீதி உலா

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பெரியநாயக்கன்பாளையம் அருகே பழைய புதூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிமூர்த்தி பெருமாள் கோவில் உள்ளது. இங்கு பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. இதை ஒட்டி ஆதிமூர்த்தி பெருமாளுக்கு தினசரி அபிஷேக, ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. விழாவை ஒட்டி ஆதிமூர்த்தி பெருமாள் அன்னபட்சி வாகனம், சேஷ வாகனம், கருட வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தீர்த்த வாரியுடன் விழா இன்று நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !