உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் முருகன் தெய்வானை திருக்கல்யாணம்

திருத்தணி முருகன் கோவிலில் முருகன் தெய்வானை திருக்கல்யாணம்

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா, கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதைத் தொடர்ந்து, தினமும் உற்சவ முருகபெருமான் வள்ளி - தெய்வானையுடன், ஒவ்வொரு வாகனத்திலும் காலை, மாலை என இரு வேளைகளில் சிறப்பு அலங்காரத்தில் தேர்வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் இரவு உற்சவர் முருகர், வள்ளி - தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் யாளி வாகனம், குதிரை வாகனத்தில் வலம் வந்தார். பின் உற்சவர் முருகபெருமானுக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்களுக்கு திருமண விருந்து வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் கோவில் துணை ஆணையர் விஜயா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர். இன்று அதிகாலை, 5:00 மணிக்கு தீர்த்தவாரியும், மாலை, 5:00 மணிக்கு உற்சவர் சண்முக பெருமானுக்கு சிறப்புஅபிஷேகம், இரவு, 8:45 மணிக்கு கொடி இறக்கத்துடன் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !