உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தருக்கு கேசரி வழங்கி இஸ்லாமியர் அவிநாசி தேரோட்டத்தில் நெகிழ்ச்சி

பக்தருக்கு கேசரி வழங்கி இஸ்லாமியர் அவிநாசி தேரோட்டத்தில் நெகிழ்ச்சி

அவிநாசி:அவிநாசிலிங்கேஸ்வரர் தேரோட்டத்தில், பக்தர்களுக்கு இஸ்லாமியர் ஒருவர் கேசரி வழங்கியது, பலரது பாராட்டையும் பெற்றது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியிலுள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், சித்திரை தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளாக தேரோட்டம் நடந்தது. அப்போது, தேர் வடக்கு ரத வீதியில் வலம் வந்த போது, அப்பகுதியை சேர்ந்த காதர் மைதீன், கேசரி வழங்கினார். இறைச்சிக்கடை நடத்தி வரும் அவர் கூறுகையில், தேர்த்திருவிழாவில், என்னால் முடிந்ததை செய்ய வேண்டுமென்று, மனைவியுடன் பேசினேன். அவர் கூறியவாறு, கேசரி தயாரித்து, தேர் இழுத்த பக்தர்களுக்கு வழங்கினேன். ஏதோ, என்னால் முயன்ற சிறிய சேவை, என்றார். இஸ்லாமியர் ஒருவர், தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு கேசரி தயாரித்து வழங்கிய செயல், மனிதநேயத்தை பறைசாற்றுவதாக அமைந்ததும், காதர்மைதீனை பலரும் பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !