கனமழை : ராமேஸ்வரம் கோயில் பிரகாரத்தில் மழைநீர் தேங்கியது
ADDED :886 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கன மழையால் திருக்கோயில் 2ம் பிரகாரத்தில் மழைநீர் தேங்கி கிடந்தது. நேற்று இரவு ராமேஸ்வரத்தில் 7 செ.மீ., அளவுக்கு கனமழை பெய்தது. இதனால் கோயில் நான்கு ரதவீதி, ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன்பு சாலையில் 2 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி கிடந்து, சிறிது நேரத்திற்கு பின் கடலில் கலந்தது. இம்மழையால் அன்றிரவு ராமநாதசுவாமி கோயிலில் நடைசாத்தப்பட்ட நிலையில், 2ம் பிரகாரத்தில் ஒரு அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி கிடந்தது. அப்போது கோயிலுக்குள் பக்தர்கள் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு இல்லை. மழை நின்றதும் இரவோடு இரவாக தேங்கி கிடந்த மழை நீரை கோயில் ஊழியர்கள் பெரும் சிரமத்துடன் வெளியேற்றினர்.