அழகா! கள்ளழகா!
ADDED :944 days ago
மகாவிஷ்ணுவிற்கும், தசாவதாரங்களில் ராம, கிருஷ்ண அவதாரங்களுக்கும் சுந்தர் என்ற சொல்லை வடமொழியில் பயன்படுத்துவர். அச்சொல் தமிழில் அழகர் என்று அழகர்கோவில் பெருமாளுக்கும் ஏற்பட்டது. பாண்டி நாட்டு திவ்யதேசங்களில் உள்ள இரு கோயில்களில் பெருமாள்அழகர் என்று வழங்கப்படுகிறார். மதுரையில் கூடலழகராகவும், அழகர்கோவிலில் கள்ளழகராகவும் சேவை சாதிக்கிறார். அதிலும் அழகர் என்ற சொல் அழகர் கோவில் சுந்தரராஜருக்கு உரியதாக மாறிவிட்டது. ஆண்டாள் பாசுரங்களில் சுந்தரராஜரை குழலகர், வாயழகர், கொப்பூழில் எழுகமலப் பூவழகர் என்று போற்றுகிறார். திருமங்கையாழ்வார் இவரை, அச்சோ ஓரழகியவா என்று வியந்து பாடியுள்ளார்.