உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றக்குடி அடிகளார் 28 ஆவது குருபூஜை விழா

குன்றக்குடி அடிகளார் 28 ஆவது குருபூஜை விழா

காரைக்குடி: குன்றக்குடி ஆதீன மடத்தில் குன்றக்குடி அடிகளாரின் 28வது குருபூஜை விழா நடந்தது.

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் 45 வது குருமகாசந்திதமான குன்றக்குடி அடிகளாரின் 28 வது குருபூஜை விழா நேற்று நடந்தது. குன்றக்குடி அடிகளாரின் மணிமண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து குருமூர்த்த வழிபாடும் மகேஸ்வர பூஜையும் நடந்தது. விழாவில், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையேற்று பேசினார். மேலும், குன்றக்குடி அடிகளார் விருதை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகளுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார். மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞானபாலய ஸ்வாமிகள், அழகப்பா பல்கலை., துணை வேந்தர் க.ரவி கலந்துகொண்டு பாராட்டி பேசினர். முன்னதாக சேதுபதி வரவேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !