காவேரி அம்மன் கோயில் விழா: பக்தர்கள் வழிபாடு
ADDED :885 days ago
பாலமேடு: பாலமேடு அருகே ராஜாக்கள்பட்டியில் காவேரி அம்மன் கோயில் விழா மற்றும் அழகுமலையானுக்கு அன்னதான விழா நடந்தது. கோயில் முன் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். பின் கிராம முத்தாலம்மன் கோயிலில் இருந்து பழத்தட்டு எடுத்து பெண்கள் ஊர்வலமாக கோயில் வந்தனர். அம்மனுக்கு பூக்களால் அலங்காரம், அபிஷேக, ஆராதனை நடந்தது. பின் அழகுமலையானுக்கு சிறப்பு பூஜைகளை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை காவேரி அம்மன் கோயில் பங்காளிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.