ரெணகாளியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா
ADDED :888 days ago
பழநி: பழநி ரெணகாளியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா உற்ஸவம் நடைபெற்றது.
பழநி நகரில் புது தாராபுரம் ரோட்டில் உள்ள ரெண காளியம்மன் கோயில் சித்திரை திருவிழா, உற்சவத்தில் மே.2ல் சக்தி கரகம் அழைத்தல் ஆபரண பெட்டி எடுத்து வருதல் நடந்தது. மே .3ல் தேரோட்டம், சிம்ம வாகனத்தில் ஊர்வலம் நடைபெற்றது. மே.4ல் மகா அபிஷேகம் சக்தி கரகம் கங்கை சென்றடைதல் நடைபெற்றது.நேற்று (மே.5) அம்மனுக்கு அன்னாபிஷேகம், அன்னதானம் நடைபெற்றது. ரெணகாளியம்மனுக்கு இன்று (மே.6 ல்) சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெறும்.