தையூர் தடுத்தாண்டீஸ்வரர் கோவில் தேர் திருவிழா: பக்தர்கள் வடம் பிடித்தனர்
செஞ்சி: தையூர் பஸ் மீது கார் மோதியதில் 5 பேர் படுகாயம் கோவிலில் நடந்த தேர் விருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்.
செஞ்சியை அடுத்த தையூர் கிராமத்தில் தடுத்தாண்டீஸ்வரர் தையல்நாயகி அம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா இன்று நடந்தது. இதை முன்னிட்டு காலை தடுத்தாண்டீஸ்வரர் உடனுறை தையல்நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 11 மணிக்கு தடுத்தாண்டீஸ்வரர் மற்றும் தையல்நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் ஏற்றினர். மகா தீபாராதனையுடன் 11.30 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. விழா ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி தலைவர் தென்னரசு, அனைத்து மகளிர் கூட்டமைப்பு, தமிழன் இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
போலீஸ் பாதுகாப்பு: கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே ஊரில் வேம்பியம்மன் கோவில் திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டு பதட்டம் நிலவியதால் இன்று நடந்த தேர் திருவிழாவின் போது செஞ்சி டி.எஸ்.பி., கவின்னா தலைமையில் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப் இன்ஸ்பெக்டர் சங்கர் சுப்பிரமணி உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.