உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவதானம் பேட்டை வன துர்கை கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா

தேவதானம் பேட்டை வன துர்கை கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா

செஞ்சி: தேவதானம் பேட்டை வன துர்கை அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது.

இதை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. 10.30 மணிக்கு கன்னி பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையும், மாலை 5 மணிக்கு மலை மீதுள்ள அம்மனுக்கு அக்னி கரகம் எடுத்து சென்றனர். 6 மணிக்கு ஊஞ்சல் தாலாட்டும், 7 மணிக்கு வன துர்கையம்மன் துருவ அரக்கன் சம்ஹார திருவிளையாடல் நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு அன்ன தானமும் இரவு வானவேடிக்கை, இன்னிசை கச்சேரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சிறுகடம்பூர்: செஞ்சி சிறுகடம்பூர் முத்து மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 15 வது ஆண்டு பால் குடம் ஊர்வலம் நடந்தது. 100க்கும் மேற்பட்டவர்கள் பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !