பௌர்ணமி முடிந்தும் அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :1218 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்காண பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். தொடர்ந்து இன்று (6ம் தேதி) சனிக்கிழமை மற்றும் விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ராஜகோபுரம் அருகே அமைக்கப்பட்ட பந்தலில் காத்திருந்து தரிசனம் செய்து சென்றனர்.