உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லலிதாம்பிகை கோயில் கும்பாபிஷேகம்; வேள்வியுடன் துவங்கியது

லலிதாம்பிகை கோயில் கும்பாபிஷேகம்; வேள்வியுடன் துவங்கியது

பெ.நா.பாளையம்; பெரியதடாகத்தில் கட்டப்பட்டுள்ள லலிதாம்பிகை கோயில் கும்பாபிஷேக விழா வேள்வி பூஜையுடன் துவங்கியது.


விழாவையொட்டி கடந்த, 19ம் தேதி காலை, 9:00 மணிக்கு மங்கள இசை, விநாயகர் வழிபாடு, மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 9:00 மணிக்கு தீபாராதனை, முதல் கால வேள்வி நடந்தது. மாலை, 5:00 மணிக்கு இறை சக்திகளை திருக்குடங்களுக்குள் எழுந்தருள செய்தல், யாகசாலை பிரவேசம், மண்டபார்ச்சனை, வேதிகா அர்ச்சனை, மகா தீபாராதனை வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று சனிக்கிழமை காலை, 8:30 மணிக்கு சகஸ்ர நாம அர்ச்சனை, மூல மந்திர யாகம் நடக்கிறது. வடுகபூஜை, கன்னிய பூஜை, சுவாசினி பூஜை, தம்பதி பூஜையும், காலை, 10:30 மணிக்கு விமான கலசம் நிறுவுதல் நடக்கிறது. நாளை, 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை, 8:00 மணிக்கு கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !