பழநி முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு திருக்கல்யாணம்
ADDED :1 hours ago
பழநி; பழநி முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.
பழநி ரயில்வே காலனி முத்துமாரியம்மன் கோயிலில் பிப்.6, காலை முகூர்த்தகால் நடுதல் நடைபெற்றது. பிப்.10 மாலை திருக்கம்பம் சாட்டுதல், பிப்.17 மாலை பூவோடு வளர்த்தல் நடைபெற்றது. நேற்று பிப்.20 காலை திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர் மாலை 6:30 மணிக்கு மேல் அம்மன் தேர் வலம் வந்தது. இன்று (பிப்.21) ரயில்வே காலனி பகுதியில் வீதி உலா, நாளை (பிப்.22) சண்முகநதியில் தீர்த்தம் எடுத்தல், பிப்.,23 சக்தி கலசம் அழைத்து வருதல் நடக்கும். பிப்.24, மாவிளக்கு பூஜை, பிப்.25,திருக்கம்பம் எடுத்தல் நடைபெறும் பிப். 26, பூச்செரிதல் விழா, பிப். 27,ல் அம்மனுக்கு மறு பூஜை நடத்தி விழா நிறைவடையும்.