சக்திமுத்துமாரியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா
ADDED :889 days ago
வடமதுரை: அய்யலுார் கெங்கையூர் மண்டபத்தோட்டத்தில் சக்திமுத்துமாரியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 3 நாட்கள் உற்ஸவ திருவிழா நடந்தது. மே 4 இரவு ஆபரணப் பெட்டி அழைப்புடன் துவங்கிய விழாவில் கரகம் பாலித்தல், பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துதல், அக்கினிச்சட்டி, மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், கருப்பசுவாமிக்கு நேர்த்திக்கடன் கிடாய் வெட்டுதல் போன்றவை நடந்தன. இன்று மாலை முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் பூஞ்சோலை செல்லுதலுடன் திருவிழா நிறைவடைந்தது.