அழகர்மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர் ; கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்
ADDED :951 days ago
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக, கள்ளழகர் 5ம் தேதி தங்கக்குதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருளினார். கள்ளழகருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகருக்கு, தசாவதார சேவை நடந்தது. அதன்பின், தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோயில் முன் பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதன்பின் அழகர்மலை கோயிலுக்கு கள்ளழகர் புறப்பட்டார். கோவிந்தா முழக்கமிட்டு திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.