திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம்
ADDED :956 days ago
திருவண்ணாமலை ; அருணாசலேஸ்வரர் கோவிலில் விடுமுறை நாளை முன்னிட்டு உள்ளூர், வெளியூர் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை கோயிலுக்கு விடுமுறை நாளை முன்னிட்டு நேற்று வெளியூர், வெளி மாநில பக்தர்கள் அதிகம் வருகை புரிந்தனர். சித்ரா பௌர்ணமி முடிந்து மூன்றாவது நாட்களாக தொடர்ந்து தரிசன வரிசையிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு தன்னார்வலர்கள் இலவசமாக ஐஸ் மோர் டேங்கர் லாரி மூலம் வழங்கிறனர்.