சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் தசாவதாரம்
ADDED :956 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயிலின் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு சித்ரா பவுர்ணமியன்று வைகையாற்றில் கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளினார். இதையடுத்து நேற்று இரட்டை அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீ சத்யபாமா சமேத ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கோயில் முன்பு அர்ச்சகர் ஸ்ரீபதி தலைமையில் தசாவதாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏகாந்த சேவை அவதாரத்துடன் சுவாமி மச்ச, கூர்மம், வராகர், வாமனன், நரசிம்மர், பரசுராம், ராமர், பலராமன், கிருஷ்ணன், கல்கி உள்ளிட்ட பத்து அவதாரங்களில் அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. யாதவர்கள் சங்கத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அர்ச்சகர்கள் கணேஷ், கார்த்திக், கிருஷ்ணஹரி, கணக்காளர்கள் பூபதி, முரளிதரன், பணியாளர்கள் பெருமாள், வசந்த் உட்பட பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.