உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் அன்னதானத் திட்டத்திற்கு காணிக்கை

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் அன்னதானத் திட்டத்திற்கு காணிக்கை

காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம், காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் நடக்கும் நித்ய அன்னதானத் திட்டத்திற்காக பெங்களூரை சேர்ந்த வெங்கட் ரெட்டி என்ற பக்தர் இரண்டு டன் காய்கறியை காணிக்கையாக கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடேஷிடம் வழங்கினார். முன்னதாக இவருக்கு  கோயிலில் சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்த கோயில் அதிகாரிகள் கோயிலுக்குள்  சென்றவர் விநாயகரை தரிசனம் செய்த பின்னர் கோயில் வளாகத்தில் பொன்னாடைப் போர்த்தி கௌரவித்ததோடு சாமி படத்தையும் கோயில் தீர்த்த பிரசாதனங்களையும் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !