காளஹஸ்தி காலபைரவ ஸ்வாமிக்கு ஏழு லட்சம் மதிப்புள்ள தங்க கவசம் காணிக்கை
ADDED :964 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உள்ள ஸ்ரீ காலபைரவ ஸ்வாமிக்கு சுமார் ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க கவசங்களை ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சீதாராம் ரெட்டி ஸ்ரீகாளஹஸ்தி சட்டமன்ற உறுப்பினர் மதுசூதன் ரெட்டி மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் தலைவர் அஞ்சுரு தாரக சீனிவாசலு முன்னிலையில் இந்த (உரைகள்) கவசங்களை கோவிலில் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து ஸ்ரீ காலபைரவ சுவாமி தங்க கவசங்களுக்கு கால பைரவர் சன்னதியில் வைக்க பட்டு சிறப்பு பூஜைகள் செய்து ஸ்ரீ காலபைரவ சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் புல்லட். ஜெயசியாம், தேவஸ்தான அதிகாரிகள்,கண்காணிப்பாளர் நாகபூஷணம், கோயில் ஆய்வாளர் சுதர்சன் நாயுடு, வேத பண்டிதர்கள், தேவஸ்தான ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.