உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளிர்ந்த மாரியம்மன் கோவிலில் சித்திரை பூச்சாட்டு விழா துவக்கம்

குளிர்ந்த மாரியம்மன் கோவிலில் சித்திரை பூச்சாட்டு விழா துவக்கம்

கோவை: கோவை நேருநகர் குளிர்ந்த மாரியம்மன் கோவிலில் சித்திரை பூச்சாட்டு விழா துவங்கியது. 3 நாட்கள் நடக்கும் விழாவில், சக்தி கரகம் இன்று இரவு நடக்கிறது.

கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள குளிர்ந்த மாரியம்மன் கோவிலில் சி்த்திரை பூச்சாட்டு விழா ஏப்.25 முதல் நடத்தப்பட்டு வருகிறது. முக்கிய நிகழ்வாக இன்று சக்திகரகம் நடக்கிறது. கடந்த ஏப்.25ல் நேருநகர் விநாயகர் கோவிலில் பொறிக் கூடை, பூக்கம்பம் ஊர்வலம் நடந்தது. நேற்று மாலை ராஜகோபால் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று (செவ்வாய்) மாலை 6.30 மணிக்கு கிரமிய கலை, மிமிக்ரி நடக்கிறது. இரவு 10.00 மணிக்கு நேருநகர் பஸ் ஸ்டாப்பிலிருந்து சக்தி கரகம் புறப்பட்டு கோவை சென்றடைகிறது. பம்பை உடுக்கை, வாணவேடிக்கைகள் நடக்கின்றன. பொங்கல் வைத்தல், அம்மன் அழைத்தல் நாளை காலை 5.00 மணி முதல் நடக்கிறது. 5.30 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. மதியம் 12.00 மணி அலங்கார பூஜைக்கு பின் அன்னதானம் நடக்கிறது. மாலையில் இன்னிசை கச்சேரி நடக்கிறது. மே 11 காலை 11.00 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !