மூவுலகரசி அம்மன் கோயிலில் தேர் திருவிழா
ADDED :968 days ago
ஊட்டி: ஊட்டி காந்தள் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மூவுலகரசி அம்மன் கோயிலில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. காசி விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து மூவுலகரசி அம்மன் ஆலயம் வரை திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலை, 6.50 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு சுவாமி திருவீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.