பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா
ADDED :981 days ago
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை காந்திபுரத்தில், பட்டத்தரசி அம்மன் மற்றும் மதுரை வீரன் கோவில் உள்ளது.
இக்கோவிலின், 94ம் ஆண்டு திருவிழா கடந்த மாதம், 25ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. இம்மாதம் இரண்டாம் தேதி கங்கணம் கட்டும் நிகழ்ச்சியும், 7ம் தேதி முனியப்பன் பூஜையும், 8ம் தேதி பவானி ஆற்றில் இருந்து தாரை தப்பட்டையுடன் சக்தி கரகம் அழைத்து வந்தனர். நேற்று அம்மனுக்கு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து அம்மன் ஊர்வலம் நடந்தது. இன்று மாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம், 11ம் தேதி மஞ்சள் நீராட்டு, மறுபூஜை ஆகியவை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.