காளஹஸ்தி சிவன் கோயில் உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணி
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் ஆன்மீக தலங்களில் வாயு தலமாகவும் இங்கு நடக்கும் ராகு கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் கலந்து கொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளிநாட்டினரும் இங்கு நடைபெறும் ராகு கேது பூஜையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தினந்தோறும்( நாளுக்கு நாள்) கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது மாணவர்களுக்கு கோடை விடுமுறை என்பதால் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் இரவு வரை சாமி தரிசனம் செய்ய கோயிலுக்கு வருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள உண்டியல்களில் செலுத்துவது வழக்கம் இந்நிலையில் நேற்று 10 .5. 2023 அன்று கோயில் உண்டியல்களில் உள்ள பணத்தை கணக்கிடும் பணியை கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு முன்னிலையில் கோயில் அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டு கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர் .அதில் கடந்த 43 நாட்களில் மொத்த பணமாக ரெண்டு கோடியே 32 லட்சத்து 19,079 ரூபாய்,; தங்கம் 130 கிராம் ; வெள்ளி 842.500 கிலோ கிராம் வெளிநாட்டு பணம் 120 வந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டது.