உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயில் வீதியில் கழிவுநீர் : பக்தர்கள் முகம்சுளிப்பு

ராமேஸ்வரம் கோயில் வீதியில் கழிவுநீர் : பக்தர்கள் முகம்சுளிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் ரத வீதியில் கழிவுநீர் ஓடியதால் துர்நாற்றம் வீசியது. இதனால் பக்தர்கள் முகம்சுளித்தபடி சென்றனர்.

ராமேஸ்வரம் பழைய போலீஸ் லைன் தெரு சாலை ஓரத்தில் நகராட்சி வாறுகாலில் வழியாக தெருவில் உள்ள வீடு, ஓட்டல்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கடந்து கடலில் கலக்கிறது. நேற்று இந்த வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் ராமநாதசுவாமி கோயில் வடக்கு ரதவீதி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ரதவீதியில் துர்நாற்றம் வீசியதால், தொற்று நோய் வரவும் அபாயம் உள்ளது. மேலும் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் முகம் சுளித்தபடி கடந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !