உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகாசி பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம்

சிவகாசி பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம்

சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.

சிவகாசி, பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் திருவிழா மே. 2 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் அம்மன் சிம்மம் காமதேனு, வேதாளம், கைலாச பருவதம் குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பொங்கல், கயறு குத்து திருவிழா முடிந்த நிலையில், இன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டு தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !