பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் நடராஜர் அபிஷேகம்
ADDED :1093 days ago
பழநி: பழநி, பெரியநாயகி அம்மன் கோயிலில் சித்திரை, திருவோணத்தை முன்னிட்டு நடராஜர், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
பழநி, பெரியநாயகி அம்மன் கோயில் நடராஜர் சன்னதியில் சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு அதிகாலை 4:00 மணி முதல் நடராஜர், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதில் பால், பன்னீர், சந்தனம் உட்பட பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெற்றது. புனித நீர் நிரப்பிய கலசங்களுக்கு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. கலச நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் நடராஜர்,சிவகாமி அம்மனுக்கு தீபாதாரனை நடைபெற்றது. அதன் பின் நடராஜர் திருஉலா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர் அழகர்சாமி பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.