அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவோண வழிபாடு; நடராஜர் பெருமானுக்கு சிறப்பு பூஜை
ADDED :1246 days ago
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, நேற்று இரவு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாதாரணை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.