வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள் வழிபாடு
ADDED :883 days ago
கோவை ; கோவை மாவட்டத்தில், தென் கைலாயம் எனும் கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை அதிகளவில் பக்தர்கள் பாதயாத்திரை சென்று தரிசனம் செய்வர். கடந்த பிப்ரவரி முதல் மே மாதம் இறுதி வரை பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சிவபெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். இன்று நடைபெற்ற பூஜையில் மூலவர் வெள்ளிங்கிரி ஆண்டவர் மற்றும் தாயார் மனோன்மணி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.