உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தட்டான்குளம் சிவகாமி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம்

தட்டான்குளம் சிவகாமி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம்

திருப்புவனம்: திருப்புவனம் அருகே நெல்முடிகரை தட்டான்குளம் சிவகாமி அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. நான்கு வழிச்சாலையில் சிவகாமி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா கடந்தாண்டு நடந்தது. ஒரு வருடம் நிறைவு பெற்ற நிலையில் இன்று காலை வருடாபிஷேக விழா காலையில் நடந்தது. வருடாபிஷேகத்தை முன்னிட்டு சிவகாமி அம்மாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை 11 மணிக்கு யாக வேள்வியும் சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை தட்டான்குளம், திருப்புவனம் நெல்முடிகரை பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !