திருநாவுக்கரசர் குருபூஜை விழா
ADDED :911 days ago
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் - சௌந்தரநாயகி அம்மன் கோயிலில் திருநாவுக்கரசர் குருபூஜை விழா நேற்று நடந்தது. 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற திருத்தலம் திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர்-சௌந்தரநாயகி அம்மன் ஆலயமாகும், இங்கு வருடம்தோறும் திருநாவுக்கரசர் குருபூஜை விழா நடத்தப்படுவது வழக்கம், இந்தாண்டு குருபூஜை நேற்று மாலை ஓதுவார் முத்துகுமாரின் திருமுறை விண்ணப்பத்துடன் தொடங்கியது. மாலை ஆறு மணிக்கு சிறப்பு அபிஷேகமும் ஆன்மீக சொற்பொழிவும் நடத்தப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை நாயன்மார்கள் குருபூஜை அன்பர்கள் மற்றும் ஸ்ரீ வேலப்ப தேசிகர் திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.