கோடை விடுமுறை : ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ADDED :1201 days ago
ராமேஸ்வரம்: கோடை விடுமுறை யொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். இந்நிலையில் நேற்று ராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இதனால் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதி உள்ள முதல் பிரகாரத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் கார் பார்க் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் மெதுவாக சென்றது.