உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யனார் கோயில் எருதுகட்டு விழா; தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

அய்யனார் கோயில் எருதுகட்டு விழா; தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தனூர் சாத்தையனார் கோவில் எருதுகட்டு விழாவை முன்னிட்டு, பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.முன்னதாக, விரதம் இருந்த பக்தர்கள் விநாயகர் கோவிலில் இருந்து, பால்குடம், காவடி, அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக சென்று, அய்யனார் கோயிலில் முன்பு தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து, மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !