மங்கள வினாயகர் கோவில் ஆண்டு விழா
ADDED :961 days ago
போத்தனூர்: குறிச்சி வெங்கடசாமி லே-அவுட்டிலுள்ள மங்கள வினாயகர் கோவில், 19ம் ஆண்டு விழா நேற்று காலை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து கலச பூஜை, அபிஷேக பூஜை,. பக்தி இன்னிசை நடந்தன. இதையடுத்து விஷ்வரூப அலங்காரத்தில் வினாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் சிவன், துர்க்கை. தட்சிணாமூர்த்திந முருகர் ஆகிய கடவுள்கட்கு யாகம். அபிஷேக பூஜை நடந்தன. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று கடவுள்களை வழிபட்டு சென்றனர்.