உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா உற்சாகம்

பெரியமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா உற்சாகம்

கோவை; பழமை வாய்ந்த, ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா கோலகலமாக நடக்கிறது.

பீளமேடு, ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா கடந்த, மே 2ம்தேதி, காலை 7:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இன்றும், நாளையும் காலை, மாலை இருவேளையும் பூவோடு எடுத்து கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். நாளை அம்மன் அழைப்பு, 17ம் தேதி, ஆதி விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பூவோடு மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவில் வரும் நிகழ்வும் நடக்கும். தொடர்ந்து, திருக்கல்யாணமும், மாவிளக்கு பூஜையும் நடக்கும். மே 18ம் தேதி, முத்தாலம்மன் திருவிழா, 19ம் தேதி, அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழா மற்றும் வசந்த பூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !