உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒவ்வொரு அமாவாசையிலும் நடக்கும் பெருமாளின் நடையழகு தரிசனம்!

ஒவ்வொரு அமாவாசையிலும் நடக்கும் பெருமாளின் நடையழகு தரிசனம்!

ராவணனின் தம்பி விபீஷணன், ராமனிடம் உள்ள நியாயத்தை அறிந்து அவனுடன் சேர்ந்து கொண்டான். அண்ணனின் நியாயமற்ற கோரிக்கைக்கு உதவாமல் தனக்கு உதவிய அவனுக்கு ராமபிரான் அயோத்தியில் இருந்த ரங்கநாதர் விக்ரகத்தைப் பரிசாக அளித்தார்.  அவனுக்கு பெருமாள், தன் நடையழகைக் காட்டிய தலம் திருக்கண்ணபுரம். நன்னிலம் அருகிலுள்ளது. இங்கு நீலமேகப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி தாயார்களுடன் வீற்றிருக்கிறார். உற்சவர் சவுரிராஜப்பெருமாள் ஒவ்வொரு அமாவாசையன்றும் நடையழகு சேவை சாதிக்கிறார். இதற்கு கைத்தலசேவை என்று பெயர். சவுரிராஜப்பெருமாளை நான்கு அர்ச்சகர்கள் அலங்காமல் தூக்கிவந்து, கைகளில் இருத்தி முன்னும் பின்னுமாக அசைப்பர். இது பார்ப்பதற்கு நடனம் போல இருக்கும். இந்நிகழ்ச்சியை விபீஷணன் கண்டுகளிப்பதாக ஐதீகம். ராமர் சந்நிதி எதிரே விபீஷணருக்கும் சந்நிதி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !