அங்காள ஈஸ்வரி கோயிலில் பிரதோஷம்
ADDED :953 days ago
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே கிருஷ்ணாபுரம் அங்காள ஈஸ்வரி கோயிலில் வாலகுருநாத லிங்கேஸ்வரர், நந்திகேஸ்வரருக்கு பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன. தீப ஆராதனை, நாமாவளி பஜனை நடந்தது. சிவபுராணம் பாடப்பட்டு பூஜைகள் நடந்தன. அங்காள ஈஸ்வரிக்கு சிறப்பு பூஜை ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.