உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவபுரிபட்டியில் பிரதோஷ வழிபாடு

சிவபுரிபட்டியில் பிரதோஷ வழிபாடு

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் தர்மசம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் , வைகாசி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது. நேற்று மாலை 4:30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட 18 வகை அபிஷேகங்களும் சிறப்பு வழிபாடும் செய்யப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டு பிரதோஷ மூர்த்திகள் புறப்பாடு நடந்தது. பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில், சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர் கோயில், முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில், கரிசல்பட்டி கைலாசநாதர் கோயில், உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாதர் கோயில், சொக்கலிங்கபுரம் செண்பகவல்லி அம்மன் சமேத அழகிய சோழீஸ்வரர் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !