வைகாசி கிருத்திகை; சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1241 days ago
கோவை : சுந்தராபுரம் காமராஜ் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் ஃபேஸ் - 1ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில், வைகாசி கிருத்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவில் சந்தன காப்பு அலங்காரத்தில் முருக பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.