விமர்சனத்திற்கு பயப்படாதீர்கள்
ADDED :1135 days ago
நீங்கள் எந்த செயலை செய்தாலும், ஒரு கூட்டம் குறைகூறிக்கொண்டே இருக்கும். இவர்களது பேச்சை மதித்து வருந்துபவரா நீங்கள்? கவலைப்படாதீர்கள். ஏனெனில் இவர்களின் நோக்கம் உங்களை காயப்படுத்துவது. எனவே இவர்களை கண்டு கொள்ளாமல் மவுனமாக இருங்கள். இந்த மவுனம் இவர்களை தாக்கும். அதிலும் ஒருவர் என்னதான் நல்லது செய்தாலும், விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க முடியாது. எனவே விமர்சனத்தைக் கண்டு பயப்படாமல், பிறர் வியக்கும்படியான செயல்களை செய்யுங்கள்.