கடைமுக தீர்த்தவாரி: 16ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
ADDED :12 minutes ago
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் துலா உற்சவம் சிறப்பாக கொண்டாடப் பட்டுவரும் நிலையில் முக்கி திருவிழாவான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் வரும் 16ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அவசர அலுவலர்களை கவனிக்கும் பொருட்டு அனைத்து சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் வரும் 21ம் தேதி சனிக்கிழமை ஈடுசேய்யும் பணிநாளாக அறிவிக்கப் பட்டுள்ளது.