1008 லட்டு அலங்காரத்தில் அருள்பாலித்த அன்னபூர்ணேஸ்வரி
கோவை: தீபாவளி பண்டிகை என்பது இந்து மதம் மட்டுமன்றி சமண மதம் சீக்கிய மதம் பௌத்த மதம் ஆகிய மதத்தினர் சிறப்பாக கொண்டாடுகின்றனர் தமிழ் மாதம் ஐப்பசியில் அமாவாசை திதியில் நாகசதுர்த்தி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது ஸ்ரீ ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து ராவணனை வதம் செய்து சீதாதேவி லட்சுமணனுடன் அயோத்திக்கு திரும்பிய நாளை வட இந்தியர்கள் அனைவரும் தீபம் ஏற்றி தீபாவளி திருநாளாக கொண்டாடி வருகின்றனர் தீமைகள் மறைந்து நன்மைகள் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது இதேபோன்று தென்னிந்தியாவில் நரகாசுரனை பகவான் கிருஷ்ணரும் சத்யபாமாவும் வதம் செய்த நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகின்றோம் செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் லட்சுமி தேவியை இந்த நாளில் கொண்டாடினால் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம் தீபாவளி திருநாள் அன்று தலைக்கு நல்லெண்ணெய் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் முப்பெறவியில் செய்த பாவங்கள் அனைத்தும் கரைந்து போகும் என்பது ஐதீகம் இந்த நிகழ்வையொட்டி கோவை ஆர் எஸ் புரம் திருவேங்கடசாமி ரோட்டில் அமைந்துள்ள அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் 1008 லட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு மூலவர் அண்ணா பூர்ணேஸ்வரி காட்சியளித்தார் அதேபோன்று இங்கு அமைந்துள்ள யோக நரசிம்மர் சன்னதியில் மூலவர் சுவாமிக்கு 1008 லட்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது இதில் அம்பாளுக்கு சொர்ண கவசம் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார் தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது மாலையில் சுவாமிக்கு சாற்றப்பட்டுள்ள இந்த லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் கோவில் நிர்வாகம் சார்பில் செயல்பட்டு வரும் வேத பாடசாலையில் படிக்கும் குழந்தைகளும் வேத விற்பன்னர்களும் வேத மந்திரங்களை பாராயணம் செய்தனர் தொடர்ந்து ஹோமம் மங்கள வாத்தியத்துடன் சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.